பொட்டு வைத்த வட்ட நிலா

மலை அருவியல் குளித்து
தென்றலில் தலை துவட்டி
வான் மேக ஆடையில்
வட்ட முகத்தை துடைத்த
நிலவு மங்கை
நெற்றியில் வைத்த
பொட்டை சரியாக
வைக்கும் போது
சிந்திய கருஞ்சாந்து
கூட அந்த வட்ட
நிலாப் பெண்ணுக்கு
அழகூட்டும்

எழுதியவர் : தங்க ஆரோக்கியதாசன் (26-Mar-13, 7:48 am)
சேர்த்தது : Thanga Arockiadossan
பார்வை : 76

மேலே