வர்ணங்கள் ஆயிரம்
சூரியன் அழகுதான்
அவன் ஒளிக் கீற்றால்
தினம்தோறும்
சுட்டெரிக்கும் வரை ...!
நிலா அழகுதான்
அவளது வனப்பு குறையாமல்
தினந்தோறும் இரவிலே
கவர்ந்திடும் வரை...!
மலர் அழகுதான்
உயிர் கொடுக்கும்
பிறக்கும்போது
உரமாகிடும் மண்ணில்
இறந்தபோது ...!
கற்பனை அழகுதான்
என் எண்ணங்களில் வர்ணம் பூசிடும்
வர்ணக் கோலங்கள்
கற்பனையிலே மிதக்கும் வரை...!
நிஜம் அழகுதான்
கற்பனை எண்ணங்கள்
உன் வருகையால்
நிஜமாகும் பொழுது...!
கிறுக்கல்கள் அழகுதான்
உன்னைக் கவிதையாகக்
கற்பனையில் என்
பேனா மை தீரும் வரை...!
வியர்வை அழகுதான்
மேல் வர்க்கம்
உழைக்காமல்
புற்களின் பனித் துளி
வெளியேறும் வரை...!