சட்டப்படி அம்மா

நான் பயணங்களின் ரசிகன். ஒவ்வொரு பயணத்தின் போதும் இந்த பயணம் இன்னும் கொஞ்சம் நீளாதா எனத்தோன்றும். பயணங்கள் மிக மிக சுவாரசியமானவை. சின்ன வயதில் உனக்கு என்ன ஆசை என யாரோ கேட்ட போது, இந்த உலகத்தின் எல்லா இடங்களுக்கும் பயணிக்க வேண்டும்! வாழ்கை முழுதும் பயணித்த படியே வாழ வேண்டும்! என்று சொன்னேன் சிரித்த படியே! என்ன மாயமோ என் வாழ்க்கையின் ஒவ்வொரு மாற்றங்களும் பயணத்தை சார்ந்திருந்தது.
*********

லண்டன்ல எப்பயாச்சும் வெயில் கொளுத்தும் அப்படியான ஒரு நாள் அன்று, பஸ் முழுதும் ஒவ்வொரு நாட்டிலிருந்து ஒருவர் படி நின்றது போல நிரம்பி கிடந்தது..
ஒரு பெண் என் அம்மா வயதிருக்கும்.. வெள்ளை புடவையில் வந்திருந்தால் கல்விச்செல்வம் தா சரஸ்வதி தாயே என காலில் விழுந்திருப்பேன் அப்படி ஒரு சாந்தம் அந்த அம்மாவின் முகத்தில் !

நான் இருக்கும் இடத்துக்கு அருகில் வந்தார்..ஒன்றுமே சொல்லாமல் எழுந்து நின்றேன் பேச்சு வரவில்லை..
"தம்பி தமிழ் போல இருக்கு"
"யா தமிழ் தான்" என் முகத்தில் அந்த வெப்பத்திலும் புன்னகை வருகின்றது
"தேங்க்ஸ் தம்பி"
"இற்ஸ் ஒகேய் "
இடையிடையே என்னை பார்த்து புன்னகைத்த படி பயணம் தொடர்ந்தது
இப்போது அந்த அம்மாவுக்கு அருகில் அமர்வதற்கு எனக்கொரு இடம்.. நான் தயங்கிய படி நிற்க
"தம்பி இருங்கவன் நானும் உங்கட அம்மா மாதிரி தான்"
எத்தனை பேருக்கு இப்படி சொல்ல தோணும் ?

இப்போது இருவருக்குள்ளும் பேச்சு தொடர்கின்றது

"தம்பி என்ன படிக்கிறீங்கள் ?"

"கம்ப்யூட்டர் சயன்ஸ்"

"மகளும் அதுதான் படிக்கிறா!"
மகள் என்று சொன்னதும் எனக்குள் எழுந்த ஆர்வத்தை அடக்கியவாறு சொன்னேன்

"ஆ ஒகேய் "

"நீங்க எந்த யுனிவேர்சிற்றி?"

"சவுத் வாங் யுனிவேர்சிற்றி"

""மகள் "குயீன்ஸ் மேரி" உங்கள தெரிஞ்சிருக்க சான்ஸ் இல்ல "" அந்த பேச்சில் இருந்த கனிவும் அமைதியும் என்னை கட்டி போட்டது

இப்படி பயணத்தில் தொடர்ந்த பேச்சு வீடு வரை தொடர்ந்தது

வாழ்கையில் ஒரு நொடியில் ஒரு வார்த்தையில் சில பல் தேர்வு வினா ஓன்று கேட்கப்படும்.. அந்த ஒரு நொடி ஒரு வரத்தை எண்களின் ஒட்டு மொத்த வாழ்க்கையை திருப்பி போடும் சரியான தெரிவுகளை நாம் எடுக்க தவறுவதுண்டு. அதிகமாக பிழையான தெரிவுகள் சரியானதாக தோன்றும்.

மூன்று வருடங்களுக்கு பிறகு
இன்னுமொரு பயணம்
இப்போது காரில்

"இஞ்ச ரஞ்சிற் ஸ்லொவ் ஆ போங்க என்னையும் பிள்ளையும் அம்மாவையும் கொல்லுற பிளான் போல "
"அதுக்கேன் இப்ப கத்துறிங்க மாமி உங்கட மகளை சத்தம் போடாம இருக்க சொல்லுங்க ப்ளீஸ்"

"நீங்க அத காதில விழுத்தாம போங்க தம்பி அவள் கொஞ்சம் கோபக்காரி அப்பாவ போல"
இதை சொன்னது வேறு யாருமல்ல சரஸ்வதி எனது சட்டப்படி அம்மா "ஐ மீன் மதர் இன் லோ "

இருந்தாலும் "தாய போல பிள்ள நூல போல சேல" என்று சொன்னவன் என் கையில் இதுவரை சிக்கவில்லை
யாவும் கற்பனை

எழுதியவர் : ரஞ்சித் (22-Apr-13, 4:26 am)
பார்வை : 206

மேலே