பெற்ற மகளும்,பூத்த பூவும்!

வரதட்ச்சனை வேண்டும்
ஆண் மகனுக்கு,
தன் அன்பு
மகளை மணமுடிப்பது - என்பது!
பொத்தி பொத்தி
வளர்த்த செடியில்
பூத்த மலரை,
வெடுக்கென பறித்து
மலர் வலயத்தில்
வலுகட்டாயமாய் கட்டி,
மறித்து நாற்றமடிக்கும்
பிணத்தின் காலடியில்
வைப்பதற்கு சமமே!
கடவுளின் கொடையான
மகளை பெற்றெடுத்த
மகாராசாக்களே சிந்தியுங்கள்!
மருமகன் வேடத்தில்
வாங்காத கடனுக்கு
கொள்ளை வட்டி
கேட்க்கும் கொள்ளைகாரனுக்கு,
எக்காரணம் கொண்டும்
தங்கள் அன்பு
மகளை மணம்
முடித்து தராதீர்கள்!
அஃது உங்களுக்கும்
உங்கள் அன்பு
மகளுக்கும் நீங்களே
செய்து கொள்ளும்
மிகப்பெரிய துரோகம்!