பாவேந்தன் தமிழாள வந்தான்
தமிழுக்கு இயக்கம் கண்டான்
இளைஞர்க் கிலக்கியம் தந்தான்
அமுதொக்கும் தமிழே என்றான்
தாசன் - தமிழ் – மூச்சென நின்றான்
பாவேந்தன் தமிழாள வந்தான்
குடிமக்கள் குரலாக வளர்ந்தான்
வாளேந்தும் படைத் தமிழ் கொண்டான்
வரும் பகை முழுவதும் வென்றான்.