ஒதுங்கி கொண்டு வாழ்த்தும் உளியாய் நீர்... (பிறந்த நாள் வாழ்த்துக்கள்)

ஒதுங்கி கொண்டு வாழ்த்தும் உளியாய் நீர்...

மெய்யெழுத்துக்களின் மெல்லினமே...! எனக்கான ஆயுத எழுத்தே...!

காற்றோடு கலக்கும் என் மூச்சுக் காற்று இனிக்கிறது...
உள் நாக்கோடு உரையாடும் உமிழ்நீர் ஊக்கமடைகிறது...
பாசம் கொண்டவருக்கு என் பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொல்லும் போது.

அன்னை முகமாய்
உம் முகம் பார்க்கிறேன்
அவனியில் மிஞ்சும் வரை.

நான் ஒதுங்கிய திண்ணையாய்
உம் மடி சாய்கிறேன்
உள்ளம் துள்ளும் வரை.

செதுக்கி விட்ட சிற்பமாய்
இன்று நான்...
ஒதுங்கி கொண்டு வாழ்த்தும்
உளியாய் நீர்...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் என்னவரே.....

எழுதியவர் : வெனிஸ் (6-May-13, 6:03 pm)
சேர்த்தது : venish
பார்வை : 275

மேலே