நீயும் என் நண்பனே

படுக்கையில் படுத்து கண்மூடும்போது.. ..தூங்கப்போரியா ?
[இல்லை தூக்குல தொங்கப்போறேன் :-)

2. மழை நேரத்தில் வெளில கிளம்புறதைப்பார்த்துட்டு...­.. மழைல வெளியே போறியா?
[ இல்லை மாரியாத்தாவுக்கு கூல் ஊத்தப்போறேன்:-)]

3. அறிவாளி நண்பன் லேண்ட் லைனுக்கு கால் பண்ணிட்டு...... ­ மச்சி எங்கிருக்கே?
[ உங்க ஆயா வீட்ல இருக்கேன் மச்சி :-) ]

4. பாத்ரூம்லேர்ந்து ஈரத்தோட தலை துவட்டிகிட்டு வெளில வரும்போது..... குளிச்சியா?
[ இல்லை கும்மி அடிச்சேன் :-) ]

5. தரைதளத்தில் லிஃப்டுக்காக காத்திருக்கும் போது... மேலே மாடிக்கிபோறியா?
[ இல்லை அமெரிக்கா போறேன் :-) ]

6. அழகான பூங்கொத்தை டார்லிங்குக்கு குடுக்கும் போது..... இது என்ன பூவா?
[ இல்லை புளியம்பழம் :-)]

7. சினிமா டிக்கெட் எடுக்க வரிசையில்நிக்கிம்போது, அறிவாளி நண்பன்.....இங்கே என்ன பன்றே?
[ ம்ம் மண்ணெண்ணெய் வாங்க நிக்கிறேன்:-) ]

8. கேண்டீன்ல நின்னுகிட்டிருகும் போது, நண்பன்....... என்ன மச்சி சாப்பிட வந்தியா?
[ இல்லை சாணி வறட்டி தட்ட வந்தேன் மச்சி :-) ]

9. எழுதிட்டிருக்கு­ம் போது, நண்பன்....மச்சி எழுதிட்டிருக்கியா?
[ இல்லை மச்சி எருமை மாடு மேய்ச்சிட்டு இருக்கேன் :-) ]

10. தடிக்கி தரையில் விழுந்ததை பார்த்துட்டு, நண்பன்.... என்ன மச்சி விழுந்துட்டியா?
[ இல்லை, நீச்சல் அடிச்சிட்டிருக் ­கேன் :-) ]
என்று பதிலளித்தால் நீயும் என் நண்பனே

எழுதியவர் : யாசர் அரபாத் (6-May-13, 8:09 pm)
சேர்த்தது : யாசர் அரபாத்
பார்வை : 403

மேலே