மானம் உள்ளவனும் மானம் இல்லாதவனும் .....

வருமான வரி துறையினர்
திடீர் தணிக்கையில்
மாட்டிய பத்து பெரும்புள்ளிகள்
சாகவில்லை


1.76 லட்சம் கோடி ருபாய்
ஏயிப்பில் மாட்டியவர்கள்
யாரும்
சாகவில்லை

500 கோடி கடன் வாங்கிய
மல்லையா
சாகவில்லை

அவனுக்கு கடன் கொடுத்த யாரும்
சாகவில்லை

இதற்கு துணை நின்ற
நிதி அமைச்சர்
சாகவில்லை

தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில்
10,000 கடன் பெற்ற காவேரி வடிநில விவசாயிகள்
சாகின்றார்கள்

சோறு போடும் இவர்களுக்கெல்லாம்
மானம் தான்
பெரிது

எழுதியவர் : (11-May-13, 9:36 pm)
சேர்த்தது : srivijayvel
பார்வை : 98

மேலே