இதொன்றும் புதிரல்ல(புதிதல்ல ) !!!
கூடுவிட்டு கூடு பாயும்
குடிசைகூட எனதில்லை
நாட்டிலே உள்ளோரெல்லாம்
வல்லவராக இருப்பதில்லை ...
தேடி தேடி காத்த தெய்வம்
தெருவிலேதான் நிக்குது
பாடி பாடி அவர்புகழ
பரிதவிச்சி போனேனே ...
கூட்டுக்குள்ள நானிருக்க
புற்று வேலி கட்டுதே
புத்தி கெட்டஉலகத்திலே
புதிராகி போனேனே ...
தட்டி முட்டி நடந்த போது
தடுமாற்றம் இல்லையே
எட்டி கட்டி யாருமென்னை
எதிர்த்தவரும் இல்லையே...
அன்று பார்த்த நிலாகூட
அமைதியாதா நகருது
இன்று பிறந்த கடிகாரம்
பரபரப்பை கூட்டுது ....
சுறுசுறுப்பு எறும்புகூட
சுதந்திரமா திரியுது
சுதந்திரத்தை வாங்கியும் நாம்
குறுகித்தானே வாழ்கிறோம் ...

