அன்பொன்றே போதும் அகிலம் முழுதும்
மன்னிக்கும் மனப்பான்மை
மனம்முழுதும் இருந்துவிட்டால்,
என்னைக்கும் தோன்றாது
பழி தீர்க்கும் பாவ எண்ணம்.
விண்ணுக்கும் மண்ணுக்கும்
இடைவெளிதான் எவ்வளவோ?,
இன்னைக்கும் இரண்டிக்கும்
பாசம்தான் பலமடங்கு.
மரத்திற்கும் அறத்திற்கும்
வேற்றுமைதான் பெரிதில்லை,
என்றிருந்தும் இரண்டையுமே
வளர்க்கத்தான் வழியில்லை.
அக்கரைக்கு இக்கரைதான்
பெரிதாக தோன்றாதே,
நல்லவர்க்கு எக்குறையும்
இழிவாக தோன்றாதே.
செய்யும் செயல் அனைத்திலுமே
மற்றவர்கள் நலம் கருதும்,
நல்லவர்க்கு நாட்டினிலே
இடமில்லை இப்பொழுதில்.
எளியவர்க்கு உதவி செய்யும்
சுகத்தினைதம் அகம் உணர்ந்தால்,
ஆலயமே தேவையில்லை,
அகிலத்தில் எப்பொழுதும்.
இகழ்ச்சி பாடும் இருளுலகோர்
இல்லறத்தில் இருக்கையிலே,
நாட்டினிலே நலலறத்தை
நாட்டுவது நடக்காது.
எல்லோரும் அடிஎடுத்து,
அறம் வளர்க்கும் ஆசை கொண்டால்,
இல்லாதோர் இல்லதிளிருள்
ஒருபோதும் அண்டாதே.
இப்படித்தான் வாழ வேண்டும்,
என்று பலர் அறிவுரைத்தும்,
அணுவளவும் அஞ்சாது,
தவறு செயும் உலகமிது.
உத்தமர்கள் வெகுண்டெழுந்து,
தவறுகளை தட்டிக்கேட்டால்,
வேற்றுமைகள் வெளியோடி,
உன்னதங்கள் அகம் அமரும்!!!!!!