வசந்தமா உனக்கு !
வருடம் ஆறு கடந்தது
அது வசந்தமா உனக்கு
வாழ்வு தேடி அரபு தேசம்
வாழ்கை தந்தது உனக்கு
உறவுகளின் உதவி தந்த
அன்று தூர தேச பயணம்
உரிமை என்றும் இல்லாத
ஒரு சராசரி சேவை அது
உழைப்பு மட்டுமே இல்லை
உண்மையான ஈடுபாடு
ஊதியமும் திருப்தி உண்டு
பொறுப்புகள் தலையில் கொண்டு
சொந்த நிறுவனம் போல் சேவையில்
இறுதிவரை மாறாத கவனம்
சொல்லாத பேச்சு வரும் -இன்னும்
சொல்லிவைத்து இல்லை ஏனும்
உறவுகளின் பிணைப்பு கொண்டு
உண்மையும் செத்துவிடும்
நாளை ஒரு வன்மை சொல்
வந்திடாமல் நம்மை காத்திடணும்
கலங்காமல் அந்த ரப்பின் மேல்
பாரத்தை இறக்கி வைத்து
பதறாமல் நீ கிளம்பி வா
படைத்தவன் நல்ல வழி காட்டுவான்
உனக்கு ஒரு நல்ல வேலை கிடைக்க
எங்கள் துவா எல்லாம் உனக்காக
வசந்தம் ! வரும் உன் வாழ்வில் -நல்ல
வேலையும் அமையும் கூடிய விரைவில்
இன்ஷா அல்லாஹ் !
இனிதே அமையும் !!
ஸ்ரீவை.காதர்.

