அமில வீச்சு
பொறியியில் முடித்தாள்
வாழ்வில் போராடி!
அவளின் அழகான கண்கள்
பல பேரின் தூக்கத்தை தொலைத்தன !
அவள் கர்வம் கொள்ள வில்லை ?
,காதலும் கொள்ள வில்லை!
காரணம் அவள் மேல்
பெற்றோர் வைத்த நம்பிக்கை!
வேலைக்கு சென்றாள்
பூக்களோடும் , நிலவோடும் மட்டும் பேசினாள்
அது அவளை போன்றே இருப்பதனால்
விதியின் சதி
ஒரு விஷ கிருமி அவள் மீது வீசினான் அமிலத்தை
அவள் செய்த பாவம் அழகாய் பிறந்தது தானோ?
விதி மட்டும் இல்லையெனில் அவளும் வாழ்ந்திருப்பாள் இளவரசியாக !

