முத்தம்
இமைகளின்
இடைவிடாத
முத்தம்....
கண்கள் போதும் போதும் என்று சொல்லியும்
வெளியே வலிந்து ஓடும் அளவிற்கு முத்தம் ...
கைகள் துடைத்து....
கைக்குட்டை நனைந்து .....
வெட்கத்தில்
கண்கள்
சிவந்து போனது ...
(கண்ணீரை கூட ரசிக்க முடியும் ...கற்று தந்தது ..
என் வாழ்க்கையும் ..என் கவிதையும் )