என் பட்டாம்பூச்சி
என் பட்டாம்பூச்சியே !
உன் சிறகு படபடத்தால்
என் இதயம் படபடக்கும் !
ஓவிய சிறகசைத்து
உலா வரும்
என் தூரிகைப் பறவையே !
என் உயிர் ஓவியமே!
நீ ஆனந்தத்தின்
ஆசை கலந்த ஊஞ்சல்
என் வாசலில்
வந்து விழுந்த
வண்ண நாணயம் நீ !
எனக்குள்
ஆழமான அதிசயங்களை
அசைத்துவிட்டுப் போன
அலங்காரப் புன்னகை நீ !
என் பூக்களுக்கு
பட்டுப் புடவை நீ !
இந்த வண்ண சிட்டு
வந்து விழுந்தால்
எந்த மலர்தான்
மடி தராது !
வானம் பிடிக்காமல்
வந்துவிட்ட வண்ணக்கிளியே !
நீயோர்
காதல் தேசத்து
கனவின் தூதுவன்!
பூக்களுக்கு முத்தமிட துடிக்கிறாய்
போய் அமர்ந்து மறுபடியும்
ஏன் பொறுக்காமல் துடிக்கிறாய் !
பூக்களுக்கு
இதமாய் இருந்தவிட
துடிக்கிறாய் !
ஆனால்...
அவை சுடுவதால்
நீ துடிக்கிறாய் !