பசி எனும் கொடுமையை கொடுத்தது ஏன் ?

தனிமையெனும் வறுமையில்
தள்ளாத வயதின் முதுமையில்
பசியின் வறுமையால்
வறண்டு கிடக்கும் நாவில்
வார்த்தையற்று உறங்கும்
இவளால்

கேட்க முடியுமா

சாப்பாடு இருந்தா கொஞ்ச
தயவு பண்ணி கொடுங்கையா - என்று

இல்லை ....

பார்த்ததும் பதைத்து உணவு
கொடுக்கும் நெஞ்சங்களும் இருக்குமா ...?

பறந்து கிடக்கும் உலகிலே
பார்க்கும் கண்களையும்
பேசும் நாவையும்
கை கால் என்று
அனைத்தையும் கொடுத்த இறைவன்

பசி எனும் கொடுமையை கொடுத்தது ஏன் ?

எழுதியவர் : சிவா (13-Jun-13, 1:57 pm)
சேர்த்தது : சிவா அலங்காரம்
பார்வை : 98

மேலே