தாய்மை

ஒரு பெண் தன் கணவரிடம் நான் கர்ப்பமாக உள்ளேன் என் மகிழ்ச்சியுடன் கூறினாள்.

அக்கணவர் அவளது கையை பற்றி "என் அருமை மனைவியே அதில் ஒரு சிறிய திருத்தம். நீ அல்ல நாம் கர்ப்பமாக உள்ளோம் என கூறு ,

கருவில் இருக்கும் குழந்தையில்
பாதி நீ
பாதி நான்

உன் சுற்றம் சூழ இருந்தாலும்
ஈன்றெடுக்கும் பொழுது
உன்னை தனியாக விட மாட்டேன் .
நான் உன் அருகிருப்பேன்

கருவை என்னால் சுமக்க இயலாது ஆனால்
கருவை சுமக்கும் உன்னை
என் நெஞ்சிலும்,கவனிப்பிலும் சுமப்பேன்.

என் குழந்தைக்கு நல்ல தந்தையாக இருப்பேன்.

நாம் கர்ப்பமாக உள்ளோம் எனவே கூறு என்றாராம் !."

உண்மையோ ,பொய்யோ அறியவில்லை ஆனால் இத்தகைய தந்தைகளுக்கு கோடி நமஸ்காரம்

எழுதியவர் : டெல்சி பிரபு (12-Jun-13, 4:18 pm)
பார்வை : 114

மேலே