மனசாட்சி
மனசாட்சி உறங்கும் நேரத்தில்தானே....
மனக்குரங்கு அலைபாய கிளம்பிவிடுகிறது....
மனமே ஒரு குரங்கானால்
மனிதனே உன்னில் ஏது மானிடமே?
மனிதமே நீ கண்ணயர்ந்தால்
மனதில் ஏது நீதிமன்றமே?
நீதியின் சாட்சியில்
மனசாட்சி குற்றவாளியா?
இல்லை தெய்வத்தின் சாட்சியில்
நீதிபதிகள் குற்றவாளியா?
தீர்ப்பு வருவதற்குள் மீண்டும் கண்ணயர்வா? செங்கோள் செவிலி தாயனது...
கொடுங்கோள் தலைவிரித்து ஆடுகிறது...
தூங்கும் வரை விடியல் ஏது?
விடிந்தால்.. என் இரவுக்கும் சொல்லி அனுப்பு.... (குரங்குடன் போராட துடிக்கும் மனம்) விஜி/87.

