புத்தக வாசிப்பு

இரவினில் சப்தம்
வீதியெங்கும் கேட்கிறது
வீடெங்கும் சீரியலாக ...

புத்தகத்தின் அருமை
புரியவில்லை
அம்மாவுக்கு ...

வாசிப்பதில்
மும்முரமாக
நானிருக்க ...

அப்பா வருகிறார்
செய்தி மாற்ற ...

அண்ணன் வருகிறான்
கிரிக்கெட் பார்க்க ...

சண்டைகள்
ஓயவில்லை
இம்மூவருக்குள்...

தொல்லையிலிருந்து
தப்பித்துவிட்டது
தொலைக்காட்சிப்பெட்டி
மின்சாரம் தடைப்பட்டதினால் ...

மீண்டும் படிக்கத்
தொடங்குகின்றேன்
விளக்கினை வைத்து ...

யாருடைய
தொந்தரவும்
இன்றி ...

எழுதியவர் : ப்ரீத்தி கடற்கரை ராஜ் (20-Jun-13, 11:54 am)
பார்வை : 123

மேலே