பயணம்..!

நான் ஏறி அமர்ந்த
பேருந்து எதற்காகவோ
இன்னும் நகரவில்லை....
நகர்வை எதிர்பார்த்து
என் வியர்வை ஸ்பரிசத்தில்
வழியத் தொடங்கியது
என் வியப்பு......!
என் இருக்கைக்குக் கீழே
என் காலுக்கடியில்
பாம்பின் வாலொன்று
தட்டுப்பட்டது...!

கழுத்துக்குப் பின்னே
உஷ்ண பெருமூச்சு....!
அதே பாம்பினதாய்
இருக்கலாம்...!

புறக் காரணி தடைக்கும்
வரை எங்கள் இருப்பு
இப்படியே அமைவது
என் வரையில் சரி..!
பாம்பிற்குத தெரியத்தான்
வேண்டுமா???

தொடக்கத்திலே
நிலைக் கொண்டுவிட்ட
இந்த பயணம்,
இந்த இருப்பு,
முடிவில் கற்பனை
அலைவரிசையில் மட்டும்
நீக்கமற சுழன்று
கொண்டிருக்கலாம்...!

முடிவே இல்லாத இப்பயணம்
தொடங்கவே இல்லை
என்பதை
நம்ப மறுக்கிறது பாம்பு...!

யுக யுகங்கள் கடந்து
போனதாய்க் கற்பனை
செய்யும் பாம்பிற்கு
பேருந்தோ பயணமோ
பற்றிய கவலை
சிறிதுமில்லை...!

ஆனால்
எனக்கான கட்டளை
இப்பயணத்தைத் தொடர வேண்டும்
என்பதோடு சரி...!

பயணத்தின் முடிவு பற்றி
எனக்கெதுவும் தெரியாது....!

பாம்பிற்கோ
பயணத்தைப் பற்றியே தெரியாது....!

பாம்புடன் பயணிப்பதாய்
நானும்
என்னுடன் பயணிப்பதாய்ப்
பாம்பும்
நினைத்துக் கொண்டிருக்கும்
அந்தப் புள்ளியில் தான்
இது பயணமாகிறது..!

எழுதியவர் : நெ.ஹரீஷ் (30-Jun-13, 1:22 am)
சேர்த்தது : Hareeshmaran
பார்வை : 64

மேலே