நட்பு(பூ)
இந்தப்பூ
காதல் மண்ணில்
பூத்தால் தான் வாடும்
நட்பு மண்ணில் அல்ல
சேதத்தை தருவது காதல்
சிநேகத்தை தருவது நட்பு.
சந்தேக சூழலில்
வளர்வது காதல்
சந்தோஷ சூழலில்
வாழ்வது நட்பு
சிலர்க்கு
காதலென்பது
மோகம் உள்ளவரை
பலரின் பலர்க்கு
நட்பென்பது
உயிர் போகும் வரை
நட்பால் மலர்ந்த
காதல் வாழலாம்
காதலுக்காக முளைத்த
நட்பு வீழவே வேண்டும்.
காதல் ....
எமனோடு மரணத்தை அழைக்கும்
நட்பு
எவனோடும் மரணத்தை வெல்லும்.
{என் பருவ வயதில் நட்புக்கும் காதலுக்கும் என் மனசாட்சியில் நடந்த சண்டையில் என் மூளை எழதிய தீர்ப்பு இது)
ரா.சந்தோஷ் குமார்