நானா அதிர்ஷ்டசாலி?

நாட்கள் நகர்ந்தாலும்
நரை என்னை நனைத்தாலும்
கண் கலங்க வைத்த
என் கல்லூரி வாழ்க்கையை
என் சொல்லி நான் அழுவேன்
இனி யார் சொல்ல நான் அதை நினைப்பேன் .......

நிகழ்காலம் என்னை நிலையாக விடவில்லை
எதிர்காலம் என்னை எதிரியாக நினைக்கவில்லை
என் இறந்தகாலமும் என்னை இருக்க விடவில்லை
எனினும்
என்னை முன்னோக்கி தள்ளுவது என்ன?

கண்கள் கசிந்தாலும்
கவிதைகள் நிறைந்தாலும்
இனி யாரிடம் பொய் சொல்வேன் ...
சோகங்கள் இறக்கி வைக்க
இனி சுமைதாங்கி எங்கே சென்று தேடுவேன்?

பெண்ணின் கறைகள் பின்னால் பட்டால்
யார் என்னை இனி பின்பற்றி வருவாள்?
பிறகு தீட்டு எனதல்லாமல்
யார் என்னை தீண்டு என சொல்லுவாள்......

சோறு கொண்டு வந்தேன் என்று சொன்னால் சிர்த்து
இல்லை என்றால் முறைத்து
யார் எனக்கு சொறிடுவாள்?
என்னை புறந்தள்ள நினைத்து
இறுதி நிமிடத்தில் இதயம் தாங்காமல்
யார் இடறி விழுவாள் ?
புகழுக்கு மட்டும் என்னை சொந்தமாக்கி - என்
புலம்பலுக்கு யார் சந்தமாவாள்?

சிநேகம் வைக்க ஒரு சினேகிதி உள்ளாள்
என நினைத்தபடி சில்லறையாய் என் கல்லூரி- நாட்களை
பொறுக்கிக் கொண்டிருக்கும் நானாஅதிர்ஷ்டசாலி?

பிச்சைகாரனும் விழுவதை தான் பொறுக்குவான்
நான் விழுந்ததை பொறுக்குவதிலேயே விழுவதை-
விட்டுவிடுகிரேனே !
நானா அதிர்ஷ்டசாலி?
.
பாடம் சொல்லிக்குடுத்து பின்
பாங்காய் திரும்பச்சொல் எனச் சொல்லும் போது
திருதிருவென விழித்த விழிகள் கண்டு
பாடம் தனக்கு சரியாய் விளங்கிங்கிக் -கொள்ளவில்லை
மறுமுறை ஒருமுறை விளக்குகிறேன் என்று
என் குறையை அவள் ஏற்று
நிறையாக்கிய வித்தை புரியும் போது
பிரிகிறாலே நானா அதிர்ஷ்டசாலி ?

அடபோங்கன்னே
காதல் எனும் விந்தை புரியாமல்
காமக்கசடுகள் பற்றி அறியாமல்
என் கல்லூரி வாழ்க்கையை முடிக்கிறேனே
நானா அதிர்ஷ்டசாலி ?

காலம் கடந்த தோழியுடன் ....
நாட்கள் நனைக்கும் காலம் வரும்
என காத்திருக்கும் நானா அதிர்ஷ்டசாலி?

எழுதியவர் : சுகன்யா பாரதி (4-Jul-13, 7:59 pm)
பார்வை : 216

மேலே