நீயும் நம்பிக்கை கொள்

நாளை உண்டு உனக்காக
தோல்வியை கண்டு
நீயும் சோர்ந்துவிடாதே
பல இதயம் உண்டு உனக்காக
உணர்வுகளை நீயும்
பூட்டிவைத்துவிடாதே.......

எறும்பு ஊற
கல்லும் குழியும்
நாளை உனக்காய்
ஒரு ஜோதியும் ஒளிரும்

உளிதாங்கும் கல் என்றும்
வீணாய் போவதில்லை
தோல்வி தாங்கும் மனம் என்றும்
மண் ஆழாமல் இருந்ததில்லை

சூலகம் சேரும் விந்து கூட
சும்மா சேர்ந்து விடவில்லை
பத்து மில்லியன் எதிர்த்தும்கூட
ஒரு கை பார்க்காமல் விட்டதில்லை

காந்தி சுமக்காத
சுமைகள் உண்டா...?
கலாம் காணாத
கஷ்டம் உண்டா...?
நேற்று வரை அவர்கள் சும்மாதான்
இன்று முதல் அவர்கள் மகான்கள்தான்

நேற்றை எண்ணி ஏங்கி விட்டால்
நாளை உனக்கு மயானமாகிவிடும்
இன்றை எண்ணி உழைத்து விட்டால்
நாளை உனக்கு சொர்க்கமாகிவிடும்

நெஞ்சில் வலுவூட்டி
நீயும் நிமிர்ந்து நில்
எதிர்காலத்தை செழிப்பூட்டி
நீயும் விளைத்து கொள்

எழுதியவர் : நுஸ்கி மு.இ.மு (6-Jul-13, 5:31 pm)
பார்வை : 599

மேலே