கேட்பார் யாருமில்லையா ?

நட்டு வச்ச செடியினிலே
பூத்த பூவும் காணலியே
பரிச்ச அந்த பூவையும்
தலையில வைக்க முடியலயே..

தலையில் முடி முளைக்கும்
முன்பே பூவச்சு அழகு
பாத்தா என்ன பெத்த ஆத்தா...

பாதியிலே வந்ததல்ல பூவுக்கும்
எனக்குமுள்ள அந்த பந்தம்
ஆதியிலே நாவச்ச பூதானே...

திருமணம் என்ற சடங்காலே
எனை வந்து சேர்ந்தவனோ
விதி முடிந்து பாதியிலே
என்னை விட்டு போனதாலே...

பொறந்ததுல இருந்து வச்ச
பூவை வைக்க இங்கு
தடையும் சொல்லும் மனித
உருவில் மிருகங்களும் உண்டு...

எந்த ஊர் நியாயமென்றே
யாருக்கும் இங்கே தெரியல
தடை போட வருவாங்க
இங்கு தாராளமாய் நம்மவங்க
நியாயம் கேட்கத்தான் வாரதில்ல...

எழுதியவர் : இரா. தேவாதிராஜன் (6-Jul-13, 5:09 pm)
சேர்த்தது : இரா.தேவாதிராஜன்
பார்வை : 85

மேலே