கண்களில் நுழைந்தாய்....

கண்களில் நுழைந்தாய்...! காட்சியாய் பதிந்தாய்...!
இதயத்தில் நுழைந்தாய்..! இரத்தமாய் பாய்ந்தாய்...!
கண்ணே ! பெண்ணே !
உன்னால்
நினைவுகள் எல்லாம் மாறாட்டம்...!
நிமிடங்கள் எல்லாம் போராட்டம்...!
உன்னால்
ஹார்மோன்களின் ஆர்ப்பாட்டம்-நீ
விண்மீன்களின் போர்க்கூட்டம்...!
உன்
அழகோ தங்கத்தேரோட்டம்-என்னில்
மகிழ்ச்சி பொங்கக் கொண்டாட்டம்...!
உன்
இதழ்கள் முத்த இசை கூட்டும்...!
இமைகள் சிற்பக் கலை கூட்டும்...!
உன்
பேச்சோ தமிழுக்கு அழகூட்டும்-உன்
மூச்சோ எனக்கொரு உயிரோட்டம்...!