கல்லூரிக் காதல்

அன்றே கடைசிநாள்!
அழுதுகொண்டே நான்
அழமுடியாமல் நீ!

பிரிவும் சுகமானதே
பிரிந்தபின் சேர்வோமென்றால்
பிரிந்துவிட்டேன் சேர்வதறியாது

அன்று நீ என்னைக் காதலித்தாய்
இன்று என் இளவலைக் காதலிக்கிறாய்

நான் தூக்கம் தொலைக்கிறேன்
உன்மடிதனில் தவழ்ந்த நாட்களையெண்ணி
எத்தனைக் குறும்புகள் நான்செயினும்
அத்தனையும் ரசித்தாய் அன்போடு

நீயின்றி இல்லை என்வாழ்க்கை
நான் மட்டுமில்லை உன்வாழ்க்கை
ஆயினும் காதலிக்கிறேன் உன்னை மட்டுமே!

இது கல்லூரியில் காதலித்த கதையல்ல
கல்லூரியைக் காதலித்த கதை

எழுதியவர் : இட்ஸ் மீ (16-Jul-13, 3:10 am)
பார்வை : 141

மேலே