வெப்பம்....வெப்பம்...கடும் வெப்பம்...! இங்கிலாந்தில் தான்..!

இங்கிலாந்தில் தற்போது கோடை காலமாகும். எனவே, அங்கு இந்த ஆண்டு கடும் வெப்பம் நிலவுகிறது. நேற்று 32 டிகிரி செல்சியஸ் ஆக வெப்பம் பதிவானது. இது வழக்கமான வெப்பத்தை விட 4 டிகிரி செல்சியஸ் கூடுதலாகும். வெப்பம் கடுமையாக இருக்கும் பட்சத்தில் அனல் காற்றும் வீசுகிறது.

இதை தாங்க முடியாமல் மக்கள் கடும் அவதிப்படுகின்றனர். பெரும்பாலான மக்கள் கடல், ஏரிகள் மற்றும் நீச்சல் குளங்களிலேயே தவம் கிடக்கின்றனர். குளிர்ந்த நீரில் குளித்து வெப்பத்தில் இருந்து தப்பிக்கின்றனர்.

லண்டன் உள்ளிட்ட நகரங்களில் வாழும் லட்சக்கணக்கான மக்கள் வீடுகளில் குளிர் சாதன (ஏ.சி.) அறைகளில் முடங்கி கிடக்கின்றனர். இதனால் ரோடுகளில் வாகன போக்குவரத்து குறைந்துள்ளது.

கடும் வெப்பம் நிலவுவதால் வனப்பகுதியில் உள்ள புற்கள் மற்றும் தாவரங்கள் காய்ந்து சருகாக கிடக்கின்றன. இதனால் பல இடங்களில் தீ விபத்து ஏற்படுகிறது.

இதுவரை 20 இடங்களில் புற்கள் எரிந்து அழிந்துள்ளன. அனல் காற்றில் சிக்கி ஏராளமானவர்கள் உயிரிழந்துள்ளனர். கடந்த 9 நாட்களில் மட்டும் 760 பேர் பலியாகி உள்ளனர்.

ஆக, வெயில், கானல் நீர், அனல் காற்று, வெப்பக் காற்று, சூடு என்று முதன் முதலாக அனுபவிக்கத் தொடங்கி விட்டார்கள் இங்கிலாந்துக்காரர்கள்...எல்லாம் புவி வெப்பமாக இருக்குமோ...? புவியை வெப்பமாக்குவதில் முன்னணியில் நின்ற இங்கிலாந்து முதலாளிகள்...என்று கருதலாமா..?

சங்கிலிக்கருப்பு

எழுதியவர் : சங்கிலிக்கருப்பு (19-Jul-13, 5:18 pm)
சேர்த்தது : சங்கிலிக்கருப்பு
பார்வை : 228

மேலே