கடையெழு வள்ளல்கள் !

சங்க காலத்தில் மன்னர் பலர் வள்ளல்களாக
இருந்திருக்கின்றனர் . அவர்களுள் மிக சிறப்பு வாயிந்த வள்ளல்கள் எழுவர் .
இவர்களை கடை ஏழு வள்ளல்கள் என்றும் அழைப்பர் .
***1.பேகன் ***
இவன் பழனி மலை பகுதியில் வாழும் ஆவியர் குடியைச் சேர்ந்த மக்களின் தலைவன் .
மழை பொழியும் மலை சாரல் பாதையில் சென்றுக் கொண்டு இருந்தபோது கருமே
கங்களை க் கண்டு ஆடி கொண்டிருந்த மயில் ,குளிரில் நடுங்குவதாக எண்ணி தன போர்வையை அதன் மீது போர்த்தி விட்டவன்
இதனால் இவனை மயிலுக்குப் போர்வை தந்த வள்ளல் பேகன் என அழைக்க பட்டன் .

***2.பாரி வள்ளல் ***
இவன் பறம்பு மலை பகுதியை ஆண்ட மன்னன் .இவன் பறம்பு மலை பகுதியைச் சேர்ந்த நாகமலைப் பாதையில் சென்று கொண்டிருந்த பொழுது படர்வதுக்கு பற்றுக் கோடு இல்லாமல் ஆடி கொண்டிருந்த முல்லைக் கொடி படர்வதற்காகத்
தன தேரையே கொடியருகில் நிறுத்தி விட்டுச் சென்றவன்.
ஆகவே இவனை முல்லைக்குத் தேர் ஈந்த பாரி என பெயர் பெற்றான் .
அவ்வையார் கூட இந்த வள்ளலை பாராட்டி சங்க பாடலொன்று பாடியுள்ளார்

***3*வள்ளல் காரி *****

இம்மன்னன் தன கையில் உள்ள வாள் வீச்சில்
பகைவர்களை வெட்டிவீழ்த்துவதைப் பொழுதுப் போக்காக கொண்டிருந்தான் அதனால் இவன் வாள் என்றும் செந்நிறம் கொண்டு ஒளிரும்
ஆனால் இவனோ தன்னைத் தேடி வந்து கேட்டவர்களுக்கு வெண் மயிர் பிடரிக் குதிரைகளை ப் பரிசாக வழங்கினான்
அப்போது அவன் பேசும் அன்பு மொழிகள் விதை முளைக்க உதவும் ஈர நிலம் போன்றவை
வேல் சிவப்பில் வீரமும் ,கைசிவப்பில் ஈரமும்
கொண்டவன் என்று நல்லூர் நத்தத்தனார்
சிருபானாற்றுப் படையில் பாடியுள்ளார் .

**4*ஆய்***

இவன் பொதியமலைப் பகுதியில் உள்ள மலைப்பகுதிகளையும் நிலப்பகுதுகளையும் ஆண்டு வந்த குறுநில மன்னன் .
இவன்ன்மகிழ்ந்திருக்கும் போது மார்பில் சந்தானம் பூசிய கோலத்தோடு காட்சித் தருவான்
சினந்திருக்கும் போது வில்லும் அம்பும் கையுமாக திரிபவன்.
எவருக்கும் கிடைத்தற்கரிய நீல நாகத்தின் உடையை குற்றாலத்தில் உள்ள தென்முகக்கடவுள் சிலை ஆடை இல்லாமளிருப்பதைக் கண்டு அச் சிலைக்கு போர்த்தி மகிழ்ந்தான் . மேலும் பொருள் வேண்டி வருவோர்க்கு இல்லை எனாது பொருள் வழங்கினான் .இவனைத் திண் தோள் ஆர்வ நன்மொழி ஆய் ! எனப் போற்றினர் .

*****5*அதியமான் ****
தகடூர் நாட்டை ஆண்டுவந்தவன் அதியமான் ,இவன் தன ஆட்சிக் காலத்தின் பெரும் பகுதியை
போரிலேயே கழித்துல்லான் என்பதை இவன் வரலாற்றைப் படித்தால் விளங்கும் . வேல் வீச்சில் இவனை வெல்ல யாரும் கிடையாது பெரும்
சினக்காரன் . பூஞ்சாரல் மழைப் பகுதியில் பழுத்திருந்த அரிய நெல்லிக்கனி ஒன்று இவனுக்குக் கிடைத்தது .
அது சாவமையைத் தரும் அமுதம் போன்றது .
அதனைத் தான் உண்ணாமல் அவ்வைக்குக்
கொடுத்து நீண்ட நாள் உயிர் வாழச் செய்தான்
இதனால் அவ்வைக்கு நெல்லிக்கனி ஈந்த அதியமான்
என எல்லோராலும் போற்றப்பட்டான்.

***********6*நள்ளி*********
இவன் நெடுங்கோடு மலை முகடு என்கின்ற
மலைப்பகுதி தற்போது உதகை என்று அழைக்கப்படுகிறது .இந்தமளைப்பகுதியின் தலைவன்
இவன் போர் முனையில் எப்படி கைகள் முன்னால்
நிற்குமோ அதுபோல் மலை வழ மக்களின் வாழ்க்கைக்கு வேண்டிய அனைத்துப் பொருள்களையும் வழங்கிப்ப் புகழ்பெற்றவன் !!

*******7 ஓரி ******
மலை நாட்டைச் சேர்ந்த வல் வில் ஓரி போர்முனையில் வெற்றிபெற்று புகழுடன் விளங்கியவன் காரி குதிரையில் வந்து போரிட்ட போது அவனைப் போரில் வென்று முடிவில் காரியின் குறும் பறை நாட்டைத் தனது போர்
வெற்றியினைப் புகழ்ந்து பாடிய யாழ் மீட்டும் பாணர்களுக்கு ப் பரிசாக வழங்கி பெரும் வள்ளல் எனப் போற்றப்பட்டான் .
ஆதாரம் சிறுபாணாற்றுப்படை

எழுதியவர் : எழில் சோம பொன்னுசாமி (19-Jul-13, 10:57 pm)
பார்வை : 25371

மேலே