ஒரு பெண் கவிதை
ஏடெடுத்து எழுதி பார்த்தேன்
இக்கணமும் தோன்றவில்லை
கவிதை என்னும் வர்ணனை
என் கனவை திறந்து பார்த்தேன்
என் உயிர் நுழைந்து வந்தது
அவளுருவில் கவிதை .
கண்களில் நுழைந்து
உயிரினை துளைத்தாள் .
கவிதைகளாய் எழுதி
அவளுருவம் நெய்தேன் .
ஏனென்று அறியாமல்
எந்தன் மன கதவை திறந்தாள்.
என்னவென்று தெரியாமல்
அன்பை தந்தாள் , அடைக்கலம் தந்தாள் .
பெண்ணென்று பிறந்து வந்த
வெண் மேகம் .
வெண் பனியை உருக்கி வந்த
பெண் கவிதை
கரு விழியில் காட்சி தந்த
மங்கை என்னும் மாய சிலை
ஆழ கடலில் கண்டெடுத்த வெண் முத்து
என் மனதை அவளுள் இழுக்கும்
காந்த வலைகள் .
எனக்காக பிறந்து என் வாழ்வில் வந்தாள்.