கூட்டுறவு
ஒரு பனை அதில்
பல கூடு கற்றுக் கொள் ..!
குருவிகளின் கூட்டுறவு ...!
நான் தனி மரம் என்று
பனை மரம் அஞ்சவில்லை..!
பல கூடு என்று
பனை மரம் கெஞ்சவில்லை...!
ஓலை வாடி காவோலை விழ
குருவியும் கெஞ்சவில்லை...!
குருத் ஓலையில் கூடு கட்ட
குருவியும் அஞ்சவில்லை...!
பனை பழுத்து
பல சுவை அதிலே .....!
உயிர் வாழும்
பல மனித குலம் ...!
கூட்டுறவாய் பனை நாட்டு
கூடி பயன் பேறு நாடு செழிக்க...!
பனை அளித்து பலன் தேடாதே
பனை வளர்த்து பலன் தேடு கூட்டுறவாய்...!

