ஆடி
ஆடிய சூதினால்
நாடு, மக்கள், மனைவி
அனைத்தும் இழந்தனன்
தருமன் !
நடன மாது விழி ஆடி
கோவலனின் கொடியானாள்
மாதவி !
பிற பெண்ணுடன்
உறவு ஆடி
குடும்பம் இழந்தனன்
கோவலன் !
வழக்கு ஆடி
மதுரையை எரித்தாள்
கண்ணகி !
சீதையைக் கவர
கபட நாடகம் ஆடி
இலங்கையை இழந்தனன்
இராவணன் !
சாதி வெறி
தாண்டவம் ஆடி
தர்மபுரி இரண்டானது !
சாமியார்கள் சாமி ஆடி
பெண்கள் கூட்டம்
அலைமோதல் !
ஆடி அடங்கிய பின்னும்
நினைவலைகள்
நிழலாடிக் கொண்டிருக்கும் !
முன்னாடிச் சென்றார்கள்
பின்னாடி ஆடாமல்
பிணம் !
வெ. நாதமணி
1/08/2013.