முதல் மூச்சு
பல தோல்விகள் என் மனதை கரைத்தாலும்,
வறுமை எனும் பிணி என்னை வாட்டினாலும்
ஆயிரம் கவலைகள் என்னுள் இருந்தாலும்,
பல வலிகள் என் இதயத்தை
படி படியாய் நிறுத்த நினைத்தாலும்
நிற்காத கடல் அலைபோல் என்
இதயம் துடிப்பது ஏனோ
உன் நினைவுகள் என்னுள் நிலையாய்
-இருப்பதினாலோ