இதயம் என்னிடம் இல்லை
அவ அப்படி ஒரு அழகு
எப்படி நான் அவளை பற்றி சொல்வது
அவ வரையாத ஓவியம்
அவ கண்ணதாசன் எழுதாத கவிதை
அவ விண்ணில் தோன்றாத நிலவு
அவ மண்ணில் மலராத பூக்கள்
அவ ஒரு அழகு தேவதை
அவளை போல ஒரு பெண்ணை
பார்த்தது கூட இல்லை
கற்பனை பண்ணி கூட பார்க்கவில்லை
இப்படி ஒரு அழகு தேவதையை
கண்ணால் காண்பேன் என்று
இன்றைய ராசி பலனிலும் சொல்ல
படவில்லை இப்படி ஒரு அதிஸ்ட தேவதையை
பார்ப்பேன் என்று
இன்றைக்கி மழை வரும் என்று
வானிலை அறிக்கையிலும் சொல்லவில்லை
அவ கரு விழியை கண்ட நேரம்
இதயத்தில் காதல் மழை பொழிந்தது
அவ என்ன ஜாதியோ
அவ எந்த ஊரோ
அவ என்ன படிக்கிறாளோ
அவளுக்கு என்ன பெயரோ
ஒண்ணுமே தெரியவில்லை
ஆனா ஒன்னு மட்டும் தெரியும்
என்னோட இதயம் என்னிடம் இல்லை என்று
எடுத்து கொண்டு போனது அந்த
அழகு தேவதை என்று

