அம்மாவின் அன்பு முத்தம்

தன் உடல் மூலம் உடல் தந்து, உடலிற்கு உயிர் தந்து,உயிர்க்கு உணர்வுகளும் தந்து, தன் இரத்தத்தை உணவாகவும் தந்து, இவையெல்லாம் போதாதென்று தன் உள்ளத்தையும் தருவாள் தாய் என்ற உறவு !

அவள் பாசம் என்கிற நிலவு !

பூமியிலும் சொர்க்கம் காட்டும் கதவு !

அவள் மனதெல்லாம் பிள்ளைகளின் நினைவு !

பெண் இனத்திற்கு மட்டும் கிட்டும் அற்புத அறிவு !

இறைவன் எல்லா ஜீவனுக்கும் காட்டுகின்ற பரிவு !

அம்மாவின் அன்பு முத்தம் அழகிய பதிவு !

அன்னையின் உருவில் ஆண்டவன் வாழ்கிறான் என்பது தெளிவு !

தாயன்பிற்கு இல்லை ஒரு முடிவு !

எழுதியவர் : மணிகண்டன் குரு (15-Aug-13, 5:01 pm)
சேர்த்தது : Manikandan Guru
பார்வை : 282

மேலே