நீயும் நானும் -2

என் பசி தீர்க்க வந்த அமுதம் நீ!
அமுதத்தை அடையாளம் காணாமல் அலைந்தவன் நான்!

என் முகவரி தேடி வந்த முக்தி நீ!
நல்ல முகவரி கிடைக்க தவம் செய்ய அலைந்தவன் நான்!

என் எல்லா திசையாக இருக்க வந்தவள் நீ!
புதிதாய் ஓர் திசை வேண்டி திசைகலெங்கும் அலைந்தவன் நான்!

எனை கார்மேகமாய் நினைந்த மயில் நீ!
உனை காணாது கலைந்த கருமுகில் நான்!

நட்பு பாலத்தை நட்டு வைத்தவள் நீ!
பாலத்தை விட்டு பள்ளத்தில் பாய்ந்தவன் நான்!

என் இருளில் ஒளியாய் வந்தவள் நீ!
என் நிழல் பார்த்துகொண்டே ஒளியை மறந்தவன் நான்!

எங்கோ எனக்காய் துடித்த இதயம் நீ!
இதயத்தை இறக்கி வைத்து விட்டு உறக்கத்தில் இருந்தவன் நான்!

நட்பு பயிர் வளர நாளும் விழுந்த மழைத்துளி நீ!
மழைநீர் சேகரியாமல் வறட்சியில் வாழ்ந்த நற்பயிர் நான்!

என் ஜீவ நதியின் ஊற்றாக வந்தவள் நீ!
உனை கண்டுகொள்ளாது பித்தனாய் அலைந்தவன் நான்!

என் அருகிலே விழுந்த அருவி நீ!
குளிப்பதற்கு ஓடையவது கிடைக்குமா என் புலம்பியவன் நான்!

இந்த ஜென்மத்திற்கான என் விமோச்சனம் நீ!
உனை இழந்து பாவத்தை சுமந்தவன் நான்!

எனக்காய் எழுதப்பட்ட புதுக்கவிதை நீ!
உன் பொருள் உணராமல் பக்கத்தை புரட்டிச்சென்றவன் நான்!

எனக்காய் எழுப்பப்பட்ட தங்க சிலை நீ!
உனக்கு சூட வேண்டிய மாலையை உதிர்த்தெரிந்தவன் நான்!

எனக்காய் இந்த புவியனைத்தும் எதிர்த்தவள் நீ!
உனை புரிந்துகொள்ளாது தரித்தவன் நான்!

என்னுயிரை கட்டிக்காக்க வந்த காளி நீ!
உன்னுடனே இருக்கிறேன் என நினைத்த போலி நான்!

எல்லாமாய் எனக்கு இருந்தவள் நீ!
உன் பிரிவிலே உன்னை உணர்ந்தவன் நான்!


- தமிழ்மணி

குறிப்பு :: "நீயும் நானும் - 1" 'ஐ காண விரும்பினால் என் கவிதை தொகுப்பை அடைய என் profile 'க்கு செல்க!.

எழுதியவர் : தமிழ்மணி (20-Aug-13, 10:42 pm)
பார்வை : 154

மேலே