வாரியாரும் கி.வா .ஜவும்.
ஓர் இலக்கிய கூட்டம் .சென்னை இராஜேஸ்வரி
திருமண மண்டபத்திற்கு வாரியாரும் கி.வா.ஜவும்
கலந்து கொண்டு சிறப்புரை ஆற்ற வந்த பொழுது
,மண்டப மேடையை அழகிய நடராஜர் சிலை
அலங்கரித்துக் கொண்டிருந்தது .60 ஆண்டுகளுக்கு முன்னர் வாரியார் சிதம்பரத்திற்கு சென்று ஆன்மிக சொற்பொழிவு ஆற்றும் போது அவ்வூரில் கொசுக் கடியைத் தாங்காமல் இருந்த போது
"மசகக் கடிபொறுக் காதன்றோ மன்றினுள் ஆடுவதே " என்ற கட்டளைக் கலித்துறைப் பாட்டின் ஈற்றடி
மட்டுமே நினைவுக்கு வந்தது .மற்ற மூன்றடிகள்
வாரியாருக்கு நினைவுக்கு வரவே இல்லை
வாகீச கலாநிதி கி.வா.ஜவைப் பார்த்ததும் ஆசுகவியான இவர் இப்பாடலை நிறைவு செய்வார்
என்று தோன்றவே ஒரு சிறு காகிதத்தில் அந்த
ஈற்றடியை எழுதி சிதம்பரத்தில் தான் பட்ட
கொசுக் கடியை சுருக்கமாக தெரிவித்தார் .
இரண்டே நிமிடங்களில் கி.வா.ஜ அவர் கள்அப்பாடலை நிறைவு செய்துவாரியாரையும்
அருகிலிருந்த அன்பர்களை யும் வியப்பில்
ஆழ்த்தினார்
அப்பாடல்-
விசைபெற்ற கைகளை ப் பலபடி ஆட்டி விளங்குமுகம்
திசைபெற்று நோக்கத் திருப்பித் திருப்பி அத தில்லையிலே
நசைபெற்ற அன்பர்கள் போற்றித் துதிக்க நயமஉணர
ம்சகக் கடிபொறுக் காதன்றோ மன்றினுள் ஆடுவதே "
சிதம்பரம் நடராஜர் கொசுக் கடி பொறுக்காமல்
கை கால்களைத் தூக்கி முகத்தைத் திருப்பிக்கொண்டு ஆடுவதாக நகைச்சுவையோடு
எழுதிய இப் பாடல் கி.வா.ஜவின் புலமையுடன்
நகைச்சுவை உணர்வும் விளங்குகிறது .