யாருமற்ற சாலையில்
ஆங்கில அகராதியில் உன்பெயருக்கு
அர்த்தம் தேடினேன்
தேவதை என்றிருந்தது
சிறுவயதில் எனதிருவிழி மூட
பாட்டிச் சொல்லும் பழங்கதைகளில்
கேட்டதுண்டு
ஈசாப் நீதிக் கதைகளிலும்
அவ்வப்போது படித்ததுண்டு
இப்படி
கேட்டு படித்து அறிந்தவொன்றை
நேரில் கண்டுயிர்க்க ஆவலாயிருந்தேன்
நடைவண்டி பிடித்து
நடை பயின்றன
நாட்கள்
வருட வாகனத்தில்
வாரம் பல கடந்தோடின
கடிகாரத்தின் நொடி முள்
நொண்டி அடித்தன
என்ன ஆச்சரியம்
ஒருநாள்
யாருமற்ற சாலையில்
நீமட்டும் மெல்ல
நடந்து வந்தாய் தேவதையாக!
கே.கண்ணன்.