இனம்

இனமென்னும் எருமாட்டுக்கு
இரண்டுவகை சுடுகாடு !
பணம்மட்டும் இருந்துவிட்டால்
அவை இரண்டும் ஒருகூடு !

படைப்பிற்கும் படிப்பிற்கும்
பார்க்கின்ற பாகுபாடு- வேசியுடன்
படுக்கும்போது மட்டும்
பார்ப்பதில்லையே பண்பாடு ?

பணிவிண்ணப்பம் கோரும்போது
பணத்துடன் உடன்பாடு
கொள்கின்ற கூட்டங்களே
அதிலில்லையே இன வேறுபாடு ?

துடிப்புடன் செயல்பட்டு
படிக்கின்ற நெஞ்சஙகள்
பிடிப்புடன் வாழ்வதற்கு
தடைப்போடும் வஞ்சங்கள்
இருக்கின்ற வரையிலே
சேரிகள் முன்னேறப் போவதில்லே..
பெரும்பான்மை இனங்கள்
பெரிதாய் ஒன்றும் சாதிக்கலே..
அவைகள் சாதியைத்தவிர
வேரெதையும் யோசிக்கலே..!

வயிற்றுக்கு கூழ் இல்லை – ஆனால்
அது பேசுது, என் ஜாதி உயர் ஜாதி முல்லை!
அன்றாட வாழ்விற்கு வெறும் ஜாதியா தேவை ?
சிந்தியிங்கள் தோழர்களே !
சீறும் கொள்கை வீரர்களே !
சித்தாந்த ரீதியாய் ஆராய்ந்தால்
அய்ந்தைத் தவிர
ஆறெல்லாம் போலிகளே !

நிலையான வாழ்விற்கு
சரியான வழியை கையாளூ!
கையாளூம்போது கலகக்காரர்கள்
கால்வாரினாலும் கலங்கிவிடாதே
காரியம் பெரிதா ? வீரியம் பெரிதா ?
காரியமே எனில் எல்லாம் உனக்கு கால் தூசு!
ஜாதி என்ன – மதம் என்ன
உயர்வு என்ன – தாழ்வு என்ன
எல்லாம் ஒருவகை இனமே !
நம்முள் ஓடுவதும் ஒரே நிறமே !

எழுதியவர் : (27-Aug-13, 4:19 pm)
சேர்த்தது : மாறன்மணிமாறன்
பார்வை : 48

மேலே