மனஅமைதி
பார்க்கும் கண்கள் வேண்டும்
அதனுள் பார்க்காத பார்வையும் வேண்டும்
கேட்கும் காதுகள் வேண்டும்
அதனுள் கேட்காத ஒலியும் வேண்டும்
நுகரும் மூக்கு வேண்டும்
அதனுள் நுகராத மணமும் வேண்டும்
பேசும் வாய் வேண்டும்
அதனுள் பேசாத வார்த்தையும் வேண்டும்
சுவைக்கும் நாவும் வேண்டும்
அதனுள் சுவைக்காத சுவையும் வேண்டும்
அணைக்கும் கரங்கள் வேண்டும்
அதனுள் தீண்டாத உணர்வும் வேண்டும்
நடக்கும் கால்கள் வேண்டும்
அதனுள் செல்லாத பாதையும் வேண்டும்
தூங்கும் உள்ளம் வேண்டும்
அதனுள் துயிலாத அறிவும் வேண்டும்
இத்தனையும் கிட்டும்போது
எட்டிவிடும் மன அமைதி