தோன்றுமிடம்
ஓடும் நிற்கும் ஓயாது புல் மேயும்
அசைபோடும் அதட்டினால்
அடிபணியும் அடங்கி நிற்கும்
ஆணையிட்டால் பின்தொடரும்
எஞ்சியதை இட்டால் தின்னும்
கட்டிய இடம் கதியென்று நிற்கும்
உழைக்கும் உறுதுணையாய் இருக்கும்
நன்றி காட்டும் நல்லவையே நல்கும்
ஒன்றுமட்டும் அறியாது
கொழுக்க வளர்த்தவன் பின்
கழுத்தறுத்து கொன்று உடல்
கொதிக்க உலையிலிட்டு
வெந்த பின்பு தின்பான் என்று
அறுக்கும் கைகள நீர் அன்பு
செய்யும் ஆள் உளரோ?
சுவைக்கும் நாக்குகளே
உயிர்வலியை அறியிரோ?
வாதம் செய்யும் வாய்களே
சொல்எது தீவிர வாதம் தோன்றுமிடம்?