நரேந்திர மோடியும் - கமலா பெனிவால் மோதலும்...! எதற்காக இந்த மோதல்...?
இலக்கு ஒன்று தான்.... அது மோடி பிரதமர் ஆக்குவது தான் என்று ஆர்.எஸ்.எஸ்.கும்பலிடம் காசு வாங்கிக் கொண்டு எழுதி வரும், செய்திகளை பரப்பிவரும்...மீடியாக்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் பரப்பிவரும் பொய் பிரச்சாரம் நடந்து கொண்டிருக்கும் வேளையில் தான்....
கவர்னர் கமலா பென்னிக்கும் நரேந்திர மோடிக்கும் மீண்டும் மோதல் துவங்கியுள்ளது....லோக் ஆயுக்தா விவகாரம் தான்...!
கவர்னர் ஏற்கனவே லோக் ஆயுக்தா நீதிபதியை நியமித்து உத்தரவு போட்டிருந்தார்...மாநில அரசிடம் கலந்து ஆலோசிக்காமல் நீதிபதியை நியமித்து இருப்பதாக கூறி மோடி எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்...மேலும் இந்த நீதிபதி நியமனத்தை எதிர்த்து குஜராத் ஹை கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது, இந்த வழக்கு 2004 ஆம் வருடம் முதல் நடந்து வருகிறது...
இதற்கிடையே லோக் ஆயுக்தா நீதிபதி நியமனம் தொடர்பாக புதிய நெறிமுறைகளை மாநில அரசு உருவாக்கியது. அதன்படி லோக் ஆயுக்தா நீதிபதி நியமனம் விசயத்தில் மாநில கவர்னர், தலைமை நீதிபதி ஆகியோருக்கான அதிகாரம் குறைக்கப்பட்டு முதல் மந்திரி தலைமையிலான குழுவுக்கு தான் முழு அதிகாரம் என்ற வகையில் திருத்தும் செய்யப்பட்டு,
இந்த திருத்தமும் குஜராத் சட்ட சபையில் தீர்மானமாக கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டன....பின்னர் கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்பிய நிலையில் தான் இந்த மோதல் நடைபெற்றுள்ளது...
இந்த மோடியின் தீர்மானத்தை கவர்னர் பெனிவால் திருப்பி அனுப்பி விட்டார். மாநில அரசு சட்ட சபையில் நிறைவேற்றி அனுப்பிய தீர்மானத்தில் சில திருத்தங்கள் செய்வதற்காக, குறிப்பாக லோக் ஆயுக்தா நீதிபதி நியமனம் விஷயம் தொடர்பாக சில விளக்கங்கள் கேட்டும், பழைய முறையே நீடிக்க வேண்டும் என்று கூறியும் திருப்பி அனுப்பி இருக்கிறார் கவர்னர்...
முதல்வரே நியமிக்கும் குழுவிற்குத் தான் நீதிபதியை நியமிக்கும் முழு அதிகாரம் என்றால் பின் எதற்கு லோக் ஆயுக்தா நீதிமன்றம்...? கர்நாடாகாவில் இவர்கள் எடியூரப்பாவை இந்தியாவிலேயே மிகச் சிறந்த அரசியல்வாதி..முதல்வர் என்றார்கள்....
பின்னர் தான் தெரிந்தது மகா அய்யோக்கியன் என்று....அந்த அளவிற்கு கிரானைட் மாபியாகவே செயல்பட்டார் என்று....இதே லோக் ஆயுக்தா மூலம் தான்.....முழுக்க அம்பலப்பட்டு போனதும் இல்லாமல் கர்நாடக பாஜக கூடாரமும் களைந்து போனது....அதுபோலவே,
2004 - ஆம் ஆண்டிலிருந்து வழக்கு மேல் வழக்கு போட்டு ரப்பராக இழுத்து இன்றுவரை தொங்கலில் உள்ளது....2004 - ல் இருந்து ஊழல் அற்ற ஆட்சி செய்து வருகிறார் மோடி என்கிறார்கள்....பிறகு ஏன் லோக் ஆயுக்தா நீதிமன்றத்தை அமைக்கவில்லை.....?
லோக் ஆயுக்தா நீதிமன்றம் அமைந்து விட்டால் எடியூரப்பா தேவலை போல....இவ்வளவு பெரிய மெகா ஊழல்வாதி அனைவரையும் ஓவர் டேக் பண்ணிவிட்டாரே இந்த மோடி என்று பிரித்து மேய்ந்து விடுவார்கள்....
பிரதமர் ஆகி விட்டால் லோக் ஆயுக்தா என்ற நீதிமன்றத்தை கலைத்து விடலாம் என்ற நப்பாசையும், சங் பரிவார்களின் கடைசி நம்பிக்கையும் இதற்காக பல லட்சம் கோடிகளை செலவு செய்து வரும் ஆர்.எஸ்.எஸ். என்ற பாசிஸ்ட் களின் எண்ணம் ஒருபோதும் நிறைவேறப் போவதில்லை....
காங்கிரஸ் மற்றும் பாஜக என்ற கட்சிகள் தவிர்த்து, மாநில கட்சிகளின் துணையோடு அரசு அமைந்தால் தான் கொஞ்சமாவது மிச்சம் மீதி இருக்கும்... இல்லையென்றால் அனைத்தையும் சுருட்டிக் கொண்டு நாட்டை விட்டு ஓடி விடுவார்கள் காங்கிரஸ் காரர்களும் பாஜக வினரும்..
என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்...!
சங்கிலிக்கருப்பு

