நவநீதம் பிள்ளையின் அறிக்கை ஒருதலைப்பட்சமானது - ஜி.எல். பெரீஸ்...! இவர்களின் அரசோ...?
லண்டனில் உள்ள இலங்கை தூதரகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய
ஜி.எல். பெரீஸ். ஆய்வு நடத்தும் முன்பே நவநீதம்பிள்ளை இலங்கை மீது குற்றம் சாட்டும் மனம்ப்பான்மையோடு வந்துள்ளார். ஐ.நா.குழுவினர் இலங்கை குறித்து அண்மையில் அளித்த அறிக்கையின் உண்மையை ஆராயாமல், அதற்கு எதிராக ஒரு அறிக்கையை அவர் சமர்ப்பித்துள்ளார்.
போரில் உயிரிழந்த அனைவருக்கும் அஞ்சலி செலுத்தாமல், விடுதலைப் புலிகள் உள்ளிட்ட தமிழர்கள் உயிரிழந்த முள்ளி வாய்க்காலுக்கு சென்று, அஞ்சலி செலுத்த முயன்றதில் இருந்து, அவரின் சார்பு நிலை தெரிய வந்துள்ளது. இலங்கை அரசு மீது போர்க்குற்றம் செய்ததாக குற்றம் சாட்டும் அவர், அதுகுறித்து ஆதராங்களை சமர்ப்பிக்காதது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார்...
இலங்கையில் மனித உரிமை மீறல்கள் குறித்து நேரில் ஆய்வு கொண்ட பின்னர் கொழும்புவில் செய்தியாளர்களிடம் பேசிய நவநீதம் பிள்ளை , போர் முடிந்து நான்கு ஆண்டுகள் ஆகியும் இலங்கையில் மனித உரிமை மீறல் பிரச்சனைக்களுக்கு தமிழர்கள் ஆளாகியுள்ளதாகவும் அவர்களின் துயரம் இன்னும் தீரவில்லை என்று தெரிவித்திருந்தார்.
இலங்கை தமிழர்களின் மனித உரிமைகள் குறித்த நவநீதம் பிள்ளையின் அறிக்கை ஒரு தலைப்பட்சமானது என்று குற்றம் சாற்றியுள்ளார்
ஜி.எல். பெரீஸ்...!
இந்த அம்மையார் இனி ஐ.நா.மன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்து...பிறகு அதை விவாதித்து...இந்திய இலங்கை அழுத்தங்களை எதிர்கொண்டு முடிவுகளை எடுத்து, இலங்கையிடமே அதாவது மகிந்த அரசிடமே நீங்களா பார்த்து ஏதாவது செய்யுங்க என்று மயில் இறகால் மாற்றி மாற்றி வருடி கெஞ்சுவார்கள்....
அல்லது தற்பொழுது நடக்கும் சிரியா பிரச்னை தான் எங்களுக்கு அதி முக்கியம் என்று கருதி....தமிழன் தானே எப்படியும் தாக்குப் பிடித்துக் கொள்வான் என்று மறுபடியும் சர்வதேச சமூகம் அம்போ என்று வீட்டு விடுவார்களோ ? என்று கேட்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்...!
சங்கிலிக்கருப்பு