மன்னிப்பாயா?

மன்னிப்பாயா????????

என் ஆறாம் அறிவின்
அரை நிமிட தடுமாற்றம்,
உன் இதயத்தில் இருந்த
நானே இடமாற்றம்…..

என் தாய் மொழி தந்த சில
தருண தள்ளாட்டம்
உன் விழிகளில் விளிம்பில்
சிறிதாய் வெள்ளோடம்….

சிந்தனை இழ்ந்தேன்,
சிரிப்பை மறந்தேன்,
சிறு துளி நீர் தொட்டு
சிலையாய் ஆனேன்…..

கனவை காயமாக்கினேன்,
இரவை ஈரமாக்கினேன்,
ஈரத்தின் பதம் பணிந்தே
கொஞ்சம் காயம் ஆற்றினேன்….



மண்ணோடு மகிழ வரும்
மழைத்துளி எல்லாம்,
என் கண்ணோடு கண நேரம்
கலந்துரையாடுது,
பாவம் என்னோடு சேர்ந்து
அதுவும் ஏங்குது……..

மன்னிப்பு கேட்க வரும்
சுவாசத்தின் கீதமெல்லாம்,
உன் சோக ராகம் கேட்டு
பாதியில் திரும்புது,
ஏனோ, என் பாசத்தின் பாதையை
அது கூட மறந்த்த்து…….

நாலடி நடந்தேன்,
நடந்ததை நினைத்தேன்,
தடுக்கி விழுந்தேன்,
“தண்டவாளம் தலையணையானது,
பொதிகை எக்ஸ்ப்ரஸ் போர்வையாகி போனது,”




என்
இறுதி ஊர்வல ஓசையும்,
இயற்கையோடு இணைந்த சுவாசமும்,
வீசிய மலரின் வாசமும் கூட உன்
மௌனத்தின் முன்னால் மண்டியிட்டுக் கேட்கும்,
பெண்ணே மன்னிப்பாயா???????????

என்றென்றும் அன்புடன்

எழுதியவர் : சி.ஷாமினி (5-Sep-13, 9:49 am)
சேர்த்தது : ஷாமினி
பார்வை : 103

மேலே