வாழ்த்துக்கள் !

கரும்பலகையில் எழுதினாலும்
வாழ்க்கையில் வெளிச்சத்தை
காண செய்பவர்கள் "ஆசிரியர்கள்"

தன கண் ஒளியில்
ஆயிரம் தூசிகள் விழுந்தாலும் - மாணவர்கள்
வாழ்க்கைக்கு ஒளி ஏற்றுபவர்கள் "ஆசிரியர்கள்"

பல இரவுகள் விழித்திருந்து
தன்னோட தூக்கத்தை இழந்தாலும் - மாணவர்கள்
உங்கள் வாழ்கையை தூக்கி நிறுத்துபவர்கள் "ஆசிரியர்கள்"

தனியார் கல்வி நிலையங்களில்
தன்னோட மதிப்பெண் அட்டையை அடகு வைத்து
உங்கள் மதிப்பை உலகிற்கு உணர செய்பவர்கள் "ஆசிரியர்கள்"

நாளைய தலைமுறைக்கு
தலையாய பணி செய்யும் 'ஆசிரியர்களுக்கு"
என் மனமார்ந்த ஆசிரியர் தின வாழ்த்துக்கள் !

வாழ்க வளமுடன் ! வளர்க அவர்கள் பணி !

என்றும் அன்புடன்

எழுதியவர் : சேதுராமலிங்கம்.உ (5-Sep-13, 2:55 pm)
பார்வை : 95

மேலே