பெரியார் சொன்ன ஆங்கில வார்த்தை
பெரியார், ஒரு சமயம் அண்ணாவை அழைத்து, ஒருவருக்கு ஒரு தந்தி கொடுக்கும்படி சொன்னார்.
"ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு விட்டது" என்பதை எழுதிக் கொண்டு வாருங்கள் என்று சொன்னார் பெரியார்.
அண்ணா "Already Told" என்று எழுதிக் காட்டினார். உடனே பெரியார் "Already" என்பது ஒரு வார்த்தை "Told" என்பது ஒரு வார்த்தை. ஆக இரண்டு வார்த்தை என்று தந்திக்காரன் கணக்குப் போடுவான். செலவு அதிகமாகும். ஏன் "Tolded" என்று போடுங்களேன் என்று சொன்னார்.
அண்ணா தயங்கினார். ஏனென்றால் "Tolded" என்ற வார்த்தை கிடையாதே! எம். ஏ படித்த தம்மையல்லவா கேலி செய்வார்கள் என்று நினைத்துத் தயங்கிக் கொண்டிருந்தார் அண்ணா.
உடனே, "என்ன அண்ணாதுரை; ஏன் தயங்குறீங்க?" என்று கேட்டார் பெரியார்.
அய்யா! "Tolded" என்ற வார்த்தை கிடையாது" என்று அண்ணா சொன்னார்.
"Told" என்றால் என்ன அர்த்தம் சொல்லுங்க என்று கேட்டார் பெரியார்.
சொல்லியாகிவிட்டது என்று அண்ணா பதில் சொல்லலானர்.
அப்படியானால் "Tolded" என்றால் ஏற்கனவே சொல்லியாகி விட்டது அவ்வளவுதான்" என்று பெரியார் சொல்லி முடித்தார்.
சமூகத்தில் என்று மட்டுமல்லாமல், 'மொழியை' பயன்படுத்துவதிலும் சீர்திருத்தம் செய்தவர் பெரியார். தமிழில் உள்ள கடினமான சொற்களை எளிமை படித்தினார் பெரியார் என நான் படித்து இருக்கிறேன்!
Posted by Rajarajan ராஜமகேந்திரன்
நன்றி மௌனம் பேசிய மொழிகள்

