******* எது வறுமை ??? *******

சாயம் போன உடையா ?
ஓரம் பிரிந்த பாதணியா ?

காற்றை உண்ணும் இரைப்பையா ?
ஓட்டை கூரைக்குள் நிலவொளியா ?

வாடகை வீட்டு மனவலியா ?
சில்லரை கணக்கில் கத்திச்சண்டையா ?

வருவாய் பெருக இறைத்தொழுகையா ?
தொழுகையும் காசென்றால் நாத்திகமா ?

மாதம் உருண்டாலும் கடன் தொல்லையா ?
நாளும் அது ஓதும் தூக்கமின்மையா ?

ஆதிக்க பூமியின் அடக்குமுறையா ?
சாதிக்க நினைத்தும் சூழ்நிலையா ?

முயலாதான் கூறும் இயலாமையே ... வறுமை.

எழுதியவர் : ...SAMz (7-Sep-13, 9:36 pm)
பார்வை : 93

மேலே