பிரிட்டன் துணை சபாநாயகர் கற்பழிப்பு வழக்கில் சிக்கினார் - பதவியை ராஜினமாவுக்குப் பிறகு கைது செய்யப்படுவாரா..??

நைஜல் இவான்ஸ் இவர் கடந்த 2010 - ஆம் ஆண்டில் Ribble Valley, Lancashire என்ற தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர், தற்போது இங்கிலாந்து பாராளுமன்றத்தில் உள்ள மூன்று துணை சபாநாயகர்களில் ஒருவர் தான் நம்ம இவான்ஸ்...
2002 - ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை என்று இருக்கலாம்.. ஆண்களுடன் செக்ஸ் உறவும் மற்றும் பெண்களுடன்...ஆண்களுடன் செக்ஸ் உறவு வைப்பவர் என்ன ஐயோ பாவம் பெண்கள் என்றா .. விட்டு விடுவார்..?
இப்படியே தொடர்ந்த இவரின் பாலியல் லீலைகள் முற்றி கற்பழிப்பில் போய் முடியத்தானே வேண்டும்...அதுதானே எதார்த்தம்..!
ஏனென்றால் உலகம் முழுக்க பெண்களை மனிதர்களாக பார்க்க மறுக்கும் சமூகம் தானே இருக்கிறது...இந்த உலகமயமாக்கல் கொள்கையால் சிக்கி சீரழிந்து கொண்டிருக்கும் சமூகம்...தான் என்பதற்கு நம்ம இவான்ஸ் ஒரு சான்று...
இல்லையென்றால் கணவான்களின் பாராளுமன்றம் தான் இங்கிலாந்து பாராளுமன்றம் என்று அவர்களே பீற்றிக் கொள்வார்கள்...
இவர்களைப் பார்த்து அப்படியே பார்ப்பனிய பனியா அரசும் பீத்திக் கொண்டே இருப்பவர்கள் தான் இவர்களும்...
கிடக்கட்டும் இவைகள் எல்லாம்,
வரும் செப் - 18 -ஆம் தேதி இவர் கோர்ட் முன் ஆஜராக உள்ளார்... நம்மூர் கற்பழிப்பு அரசியல்வாதிகளைப் போலவே இவரும் இவ்வாறு கூறியுள்ளார்..
நான் நிரபராதி என்று கோர்ட்டில் நிரூபிப்பேன் என்று கூறியுள்ள இவருக்கு வயது வெறும் 55 - தான்...!
ஆக, பெண்களுக்கு எதிரான உலகளாவிய இந்த பாலியல் வன்கொடுமைக்கு என்ன தீர்வு...? எனக்குத் தெரியும். உங்களுக்கு...?
- சங்கிலிக்கருப்பு -