தெய்வத்தாய்!
மகாத்மா காந்தி தென்னாப்பிரிக்காவில் கறுப்பு இன மக்களின் உரிமைக்குக்குரல் கொடுத்த நாளிலிருந்தே, அவரைப் பின் தொடர்ந்து வந்தவர். தமது 13 வயதில் மோகன் தாஸ் கரம்சந்த் காந்தியை மணந்தவரான அன்னை கஸ்தூரிபாய். 'வரி கொடா இயக்கம்', 'சத்தியா கிரகம்', 'அன்னிய துணி பகிஷ்கரிப்பு' என்று காந்திஜியின் அத்தனைப் போராட்டங்களிலும் பங்கேற்று, சிறை வாசம் அனுபவித்தார். சாதி மத பேதமற்று, காந்திஜிக்கு பக்க பலமாக இருந்தார். ஜெயில் வாசத்தின் போது, நிமோனியா தாக்குதலுக்குள்ளாகி, தொடர்ந்து மாரடைப்பு காரணமாக மகாத்மாவின் மடியிலேயே அவர் உயிர் பிரிந்தது.
(படித்தது)

