வான் மறை
வான் வழி முறையாய்
வரம் நமக்கெனவே
வந்தது வேந்தனின்
வான் மறைக் குர்ஆன்
எத்தனை கோடி
நூல்கள் பிறந்தும்
திருமறை போலே
திருத்தமாய் இல்லை
மானிடன் நோய்க்கும்
மாத்திரை நீ தான்
மாநபி யார்க்கும்
முத்திரை நீ தான்
வழித்துணையாக
வந்தவன் நீயே
வையகம் தேடும்
நீதி நூல் நீயே........

