யார் கடவுள்? எது கடவுள்? எத்தனை கடவுள்? -(அஹமது அலி)

ஆண்டவரெல்லாம்
மாண்டார்....
மாண்டவர் எங்கே
மீண்டார்?

தன்னை கடவுளென்றோரும்
தன்னுயிர் காப்பற்ற முடியாமல்
தரணி விட்டுப் போனார்..........

பிறப்பை உடையவர்
கடவுளென்றால்
பிறக்கும் முன்
யார் கடவுள்?

இறந்து மீள்பவர்
கடவுளென்றால்.....
மீளும் வரை
யார் கடவுள்?

கடவுளின் அவதாரம்
என்பவர்க்கெல்லாம்
அடிப்படை தேவைகள்
அத்தனையும் தேவை....

பிறர் உதவியில்
வாழ்பவன்
கடவுளா?

எத்தேவையுமின்றி
எல்லோருக்கும் உதவுபவன்
கடவுளா?

படைப்புகள் பலவும்
கடவுளென்றால்
படைத்தவனை
என்னவென்று அழைப்பது?

பெற்றோரும் உற்றோரும்
உள்ளவர் கடவுளென்றால்
சந்ததிகளும் கடவுள்களே!

ஆக மொத்தம்
எத்தனை கடவுள்?

எழுதியவர் : அலிநகர். அஹமது அலி. (3-Oct-13, 7:49 am)
பார்வை : 372

மேலே