தமிழ் அகராதி

அகப்பாட்டு வண்ணம் - இறுதியடி ஏகாரத்தான் முடியாது இடையடி போன்று வரும் சந்தம்.
அகப்பு - ஆழம் : தாழ்வு : படுகுழி.
அகப்புறக் கைக்கிளை - காமஞ் சாலா இளமையோள் வயிற் குறுகியொருவன் அவள் குறிப்பு அறியாது மேன்மேலும் கூறுவது.
அகப்புறச்சமயம் - பாசுபதம் : மாவிரதம் : காபாலம் : வாமம் : வைரவம் : அயிக்கியவாத சைவம் - 6.
அகப்புறத்திணை - அகத்திணைக்குப் புறம்பான கைக்கிளை : பெருந்திணை முதலியன.


அகப்புறமுழவு - எழுவகை முழவுகளுள் ஒன்று : அது தண்ணுமை, தக்கை முதலாகப் பலவகைப்படும்.
அகப்பூ - உள்ளத் தாமரை : மனமகிழ்ச்சி.
அகப்பை - குழிந்த கரண்டி : சட்டுவம் : முகக்குங்கருவி : இஃது அகழ்ப்பை என்னுஞ் சொல்லின் மரூஉ.
அகப்பொருட்கோவை - அகப்பொருளைக் கூறும் கோவைப் பிரபந்தம்.
அகப்பொருள் - அகத்திணையாகிய பொருள்.

நன்றி நிலாமுற்றம்

எழுதியவர் : கே இனியவன் (6-Oct-13, 11:45 am)
பார்வை : 237

சிறந்த கட்டுரைகள்

மேலே